காத்தான்குடி நகரசபையில் புதிய உறுப்பினர் பதவிப்பிரமாணம்

-Tamilmirror

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரசபையின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபில்  காத்தான்குடி நகரசபை உறுப்பினராக இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் இன்றையதினம்   நடைபெற்ற ஜும்ஆ தொழுகையையடுத்து இவர் பள்ளிவாசலில் கூடியிருந்த மக்கள் முன்னிலையில் காத்தான்குடி நகரசபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகரசபை உறுப்பினரான ஏ.ஜி.எம்.ஹாறூன் மீளழைத்தல் திட்டத்தின் கீழ் இராஜினாமாச் செய்ததையடுத்து அந்த வெற்றிடத்திற்கு மேற்படி புதிய உறுப்பினராக சபீல் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment