உலமா சபையின் கோரிக்கைக்கிணங்க வைத்தியர்களுக்கான பரீட்சை நேரத்தில் மாற்றம்

வெளிநாடுகளில் மருத்துவ கற்கைகளை நிறைவு செய்து உள்நாட்டில் பணிபுரிய விரும்பும் வைத்தியர்களுக்கான பரீட்சை நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ கவுன்ஸில் அறிவித்துள்ளது.

இப்பரீட்சையின் எதிர்வரும் மே 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இப்பரீட்சை நேரத்தில் முஸ்லிம்களின் வாராந்த ஜும்ஆ தொழுகை உள்ளமையினால் பரீட்சை நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கடிதம் மூலம் இலங்கை மருத்துவ கவுன்ஸிலிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதனையடுத்தே பரீட்சை நேரத்தில் மாற்றம் மேற்கொள்ள இலங்கை மருத்துவ கவுன்ஸில் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க குறித்த பரீட்சை எதிர்வரும் மே 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது என இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் பதிவாளர் டாக்டர் என்.ஜே.நோனிஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக்கிற்கு இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் பதிவாளர் டாக்டர் என்.ஜே.நொனிஸ் எழுதியுள்ள கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.

-Tamilmirror

Published by

Leave a comment