நாட்டில் இடி, மின்னல் தாக்கம் சமீப காலங்களில் மிக மோசமாக உள்ளது. பலர் உயிரிழந்தும் உள்ளனர். மின்னலில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்ட அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எம். சியாத், மின்னல் பாதுகாப்புக்கான உபாயங்களையும் எடுத் துரைத்தார்.
“இடி, மின்னல் தாக்கம் மாலை 4 மணிக்குப் பின்னரே அதிகமாக இருக்கும். மின்னல் வேளையில் வாக னங்களில் பயணம் செய்வது ஆபத்தானது.
வெட்டவெளியில் நடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும். தகர வீட்டில் மின்னல் தாக்கம் அதிகமாகும். மரத்தின் கீழ் நிற்கலாகாது. திறந்த வெளியில் மின்னல் தாக்கும் போது நிலத்தில் குந்தி கால்களை ஒடுக்கி கீழே குனிந்து கொள்ள வேண்டும். கடலில் படகில் செல்லும் போதும் இதேவிதமான உத்தியைக் கையாளலாம். நீர் நிலைகளின் அருகே நிற்கலாகாது.
தொலைபேசி பயன்படுத்துவது மிகவும் தவறு. வீட்டின் மின் உபகரணங்களைத் துண்டித்து விட வேண்டும். மின்னல் தாக்கத்தில் அகப் பட்டவர் மூர்ச்சித்து வீழ்ந்தால் செயற்கைச் சுவாசம், மசாஜ் செய்தல் என்பன முதலுதவிகள் ஆகும்.” இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.
-Thinakaran
Leave a comment