மாபெரும் இரத்ததான நிகழ்வு

MMS

எதிர்வரும் 8ம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மஹாஜன கல்லூரியில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவும் இணைந்து இந்த இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.

மாதாந்தத் தேவையான 600 அலகுகளை நோக்காகக் கொண்டு இந்த ஏற்பாடு நடைபெறுகிறது. ‘இரத்தம் கொடுத்து உயிர்காப்போம்’ எனும் மனிதாபிமான அடிப்படையில் அண்மைக்காலமாக மட்டு மாவட்டத்தில் பல இடங்களில் இரத்ததான நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment