பால் பண்ணையாளர்களின் விசித்திரமான ஆர்ப்பாட்டம்

MJ

நேற்று (02-05-2012) ஹட்டன் நகரில் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு எதிராக ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பசுமாடுகளையும், களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நூற்றுக்கணக்கான லீற்றர் பாலையும் வீதியில் கொண்டு வந்து பாலால் குளித்து, வீதியில் வீசி விசித்திரமான எதிர்ப்பையும் அதிருப்தியையும் பால் பண்ணையாளர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். தனியார் நிறுவனங்களிடம் இதுவரை பால் விற்றுவந்த பண்ணையாளர்களிடமிருந்து பாலை கொள்வனவு செய்ய அரச நிறுவனமான மில்கோ மறுத்துவருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Published by

Leave a comment