-அல்-மனார், காத்தான்குடி
தோப்பூரில் நேற்று இ.போ.ச. பஸ் வண்டியின் சில்லுக்குள் அகப்பட்டு அகால மரணமாகிய இம் முஸ்லிம் சகோதரர் சம்பந்தமான அடையாளங்கள் அல்லது இந்த ஜனாஸாவுக்கு உரிமை கோரல் என்பன இதுவரையில் மேற்கொள்ளப்படாது இருக்கும் இந்நிலையில், இச் சகோதரரின் ஜனாஸா தற்பொழுது தோப்பூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்படி ஜனாஸா நல்லடக்கத்துக்கு முஸ்லிம் சகோதரர்கள் முன்நின்று, குறித்த ஜனாஸா முஸ்லிம் சமயப்படி நல்லடக்கம் செய்ய உறுதுணை செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
![Image0647[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/image06471.jpg?w=225&h=300)
Leave a comment