ஐநா வாகனத்தில் மோதுண்டு தாய் பலி, பிள்ளைகளுக்கு காயம்

‘இதேவேளை குறித்த பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகனத்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்ட வேளையில் படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதனால் சில இளைஞர்கள் காயமடைந்துள்ளதாகவும் பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன’.

ட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் இன்று மாலை ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான வாகனம் மோதியதில் பெண்னொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது இரு சிறுமிகள் படுகாயமடைந்துள்ளனர்.

வாழைச்சேனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நடைபெற்ற இச்சம்பவத்தினையடுத்து பொதுமக்கள் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று (02-05-2012) மட்டக்களப்புக்கு வருகைதந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களை பார்வையிட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் கூட்டத்துக்காக வருகைதந்துள்ளனர்.

இந்த நிலையில் வந்தாறுமூலை, அம்பலத்தடிக் கருகில் வீதியைக் கடக்க முனைந்த தாய் மற்றும், இரு பிள்ளைகள் மீது அந்த தொடரணியில் வந்த ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்று மோதியுள்ளது.

இதன்போது குறித்த தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் இரு சிறுமிகளும் படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகனத்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்ட வேளையில் படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதனால் சில இளைஞர்கள் காயமடைந்துள்ளதாகவும் பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விடயம் தொடர்பாக குறிப்பிட்ட செங்கலடி வைத்தியசாலையுடன் தொலைபேசிமூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதேநேரம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கெண்ட வேளை இது தொடர்பாக பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றிருப்பதாகவும் தற்போது வரை தமக்கு அது தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

-adaderana

Published by

Leave a comment