இந்த ஆண்டின் மிகப் பெரிய முழு நிலவு எதிர்வரும் 5 ஆம் திகதி தோற்றமளிக்கவுள்ளது. சந்திரன் பூமிக்கு அருகில் வரவுள்ளதாக முழு நிலவு தோற்றமளிக்கவுள்ளதாக வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனை ‘சுப்பர்மூன்’ என அழைக்கப்படுகிறது.
பூமியில் இருந்து 221,802 மைல் அருகில் வரவுள்ளதால் எதிர்வரும் சனிக்கிழமை நிலவு வழமையைவிடவும், பெரிதாகவும் அதிக பிரகாசம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். சந்திரனின் சுற்றுப் பாதை சரிசமமாக இல்லாததனாலேயே அது பூமியை நெருங்கி வருவதாக வானியலாளர் ஜெரவு குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் வழமையை விடவும் அன்றைய தினத்தில் நிலவு 16 வீதம் பிரகாசிக்கவுள்ள அதே போன்று வழமையை விடவும் 14 வீதம் பெரிதாக தென்படும். இதற்கு முன்னர் கடந்த 2011 மார்ச் மாதத்தில் இவ்வாறான சுப்பர் மூன் தோற்றமளித்தது. இதில் இந்த ஆண்டு நவம்பரில் நிலவு வழமையைவிடவும் சிறியதாக தோற்றமளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-Thinakaran
Leave a comment