பொறியியலாளர், தாதிமாருக்கு வெற்றிடங்கள்
20 நாடுகளுக்கு வெளிநாட்டு தொழில்களுக்காக நாம் இலங்கையர்களை அனுப்பி வருகிறோம்.
எதிர்வரும் காலங்களில் உலகின் வளர்முக நாடுகளுக்கும் இலங்கையில் இருந்து ஆட்களை தொழில்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனா லங்காதிகார இவ்வாறு தெரிவித்தார். இதன்படி கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஜேர்மன் உட்பட மற்றும் நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமென்றும் அவர் கூறினார்.
இந்த நாடுகளில் தாதிமார், உதவியாளர், பொறியியலாளர், ஹோட்டல் உல்லாச த்துறை, விமான நிலையம், சுப்பர் மார்க்கட்டுக்களுக்காக ஊழியர்களின் தேவை உள்ளது.
அங்கு அதிக சம்பளத்துடன் தொழில் வெற்றிடங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். கேகாலை மாவட்ட செயலக அலுவலகத்தில் “ரட்டவிருவோ” தேசத்தின் வீரர்கள் அமைப்பின் மாவட்ட அலுவலகம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கும் மாநாட்டில் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
உலகில் சிறந்த தொழில்களுக்காக நன்கு பயிற்சி பெற்றவர்கள் உள்ள நாடாக இலங்கையை மாற்ற வேண்டும்.
இதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் “மஹிந்த சிந்தனை” கோட்பாட்டின் பிரகாரம் அறிவின் கேந்திரமாக இலங்கையை மாற்றும் திட்டத்தின் பேரில் செயற்படுவது துணைபுரியுமென்றும் தலைவர் கூறினார்.
கனடாவில் 1,50,000 தாதிமார் வெற்றிடங்கள் உள்ளன. அமெரிக்காவில் 3,50,000 தாதிமாருக்கு வெற்றிடங்கள் உள்ளன. எனவே அந்த நாடுகளுக்கு இங்கிருந்து தாதிமாரை அனுப்புவதற்காக அவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் தலைவர் தெரிவித்தார்.
கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வை. ஜி. பத்மசிரி உட்பட மாவட்ட பிரதேச செயலாளர்கள் அரச அதிகாரிகள் பங்குபற்றினர்.
-Thinakaran
Leave a comment