பள்ளிவாசல் விவகாரம்: நாளை இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

இலங்கையில் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை நாளை ஏப்ரல் 30-ம் திகதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை, இலங்கை அரசு தாக்குவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 20-ம் திகதி மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை என்ற இடத்தில் உள்ள மசூதியை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் முற்றுகையிட்டு ஆயுதங்களால் இடித்துள்ளனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஏப்ரல் 30-ம் திகதி சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்த உள்ளது. இந்தப் போராட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என்று அவர் கூறியுள்ளார்.

-Adaderana

Published by

Leave a comment