கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் பதவிப் போட்டி?
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் அடுத்த முதலமைச்சரும் தானே எனவும் அதில் எவருடைய கனவும் பலிக்காது எனவும் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்திருக்கிறார்.
தனது பதவிக் காலத்தில்தான் மக்களுக்குச் சேவை செய்து வருவதை மக்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள். தான் ஒருபோதும் மக்களை விட்டு விலகிச் சென்றது கிடையாது.
என்னைத் தெரிவு செய்த மக்களுடன் கூடவே இருந்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றேன். சிலர் போன்று பதவி களைப் பெற்றுக்கொண்டதும் மக்களைத் திரும்பியும் பார்க்காதவன் நானில்லை எனவும் பிள்ளையான் தெரிவித்திருக்கிறார், எனவே எவருக்காவது முதலமைச்சராக வரும் எண்ணமிருந்தால் அது வெறும் பகற் கனவாகவே அமையும். ஏனெனில் நான் தமிழ் மக்களுக்கு மட்டுல்ல கிழக்கில் வாழும் முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் எவ்விதமான பாரபட்சமற்ற சேவையாற்றி வருவதாகவும் பிள்ளையான் தெரிவித்தார்.
இதேவேளை கிழக்கு மாகாண முதல மைச்சர் எனும் பதவி இனி பிள்ளையானுக்கு ஒரு போதும் கிடைக்காது என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.
அடுத்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிச்சயமாகப் போட்டியிடும்.
கடந்த தேர்தலில் த. தே. கூட்டமைப்பு போட்டி யிடாததன் காரணத்தினால்தான் பிள்ளை யானால் முதலமைச்சராக வர முடிந்தது. கிழக்கு மாகாண முதலமைச்சர் எனும் பதவி இனி பிள்ளையானுக்கு ஒருபோதும் கிடையாது’ என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை இப்போதுள்ள சிலர் விமர்சிப்பதற்கு அருகதையற்றவர்கள். ஏனென்றால், தமிழரசுக் கட்சி அப்போது போட்டு வைத்த அத்திவாரத்தில்தான் இவர்கள் வீடுகட்டி வாழ்ந்து கொண்டி ருக்கின்றார்கள். இப்போது, இவர்கள் வசிக்கும் வீடு எங்கள் தந்தை செல்வா போட்ட அத்திவாரத்தில் அமைக்கப்பட்ட தாகும் என்று சீ. யோகேஸ் வரன் தெரிவித்தார்.
-தினகரன்
Leave a comment