தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசல் விவகாரத்திற்கு அமைதியான தீர்வு கிடைக்க வேண்டும் என வேண்டி நேற்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் நாடு பூராவும் உள்ள சகல பள்ளிவாசல்களிலும் அமைதியான துஆப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இதில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
தம்புள்ளை ஹைரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற சம்பவத்தையடுத்து முஸ்லிம்கள் அனைவரும் பொறுமை காத்து துஆப் பிரார்த்தனையில் ஈடுபடு மாறு உலமா சபை இலங்கை, முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் முஸ்லிம் அமைச் சர்கள், எம்.பிக்கள் கூட்டாக கோரியிருந் தனர். இதன்படியே சகல பள்ளிவாசல் களிலும் அமைதியான துஆப் பிரார் த்தனைகள் நடைபெற்றதாக அறிவிக் கப்படுகிறது.
காத்தான்குடி
மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றன.
காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல்களில் இப்பிராத்தனைகள் இடம்பெற்றன.
ஏறாவூர்
ஏறாவூரிலும் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பிரார்த்தனை நிகழ்வு ஏறாவூர் ஜமிஉல் அக்பர் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இதனை ஒழுங்கு செய்திருந்தது.
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் நோன்பு பிடித்துக் கொண்டும் சகல ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் பள்ளி வாசல் முன்றலில் அமர்ந்தும் அமைதியான முறையில் துஆப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. மேலும் அமைதி வேண்டி திருமலை சோனகத் தெரு மத்திய வீதி, வடகரை வீதி, மட்கோ, ஜமாலியா, ஜின்னா நகர், பெரியகடை ஆகிய ஜும்ஆப் பள்ளிவாசல்களில் இவ்வாறு பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
ஹம்பாந்தோட்டை
ஹம்பாந்தோட்டை புதிய பள்ளிவாசலில் விசேட குத்பாவும் துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றன. இதில் 3000 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஹம்பாந் தோட்டை நகரெங்கும் ஜும்ஆ ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தோடு இதில் சமாதானம் தொடர்பான பயானும் விசேட குனூத்தும் இடம்பெற்றது.
தொழுகைக்கு பிறகு அனைவரும் ஒன்றுகூடி துஆ பிரார்த்தனையும் அமைதியாக இடம்பெற்றது.
தம்புள்ளை, மாத்தளை
தம்புள்ளையிலும் மாத்தளையிலும் நேற்று விசேட ஜும்ஆ பிரசங்கமும் பிரார்த்தனையும் இடம்பெற்றது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
வெலிகம
வெலிகம, மாத்தறை, காலி ஆகிய பிரதேசங்களில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் நேற்று விசேட ஜும்ஆ பிரசங்கமும் தம்புள்ளை விவகாரம் தொடர்பில் விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. பெருந்திரளான மக்கள் இவற்றில் கலந்துகொண்டனர். துஆப் பிரார்தனையின் பின்னர் மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
களுத்துறை
களுத்துறை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தினம் நோன்பு நோற்றனர்.
பல பள்ளிவாசல்களில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் விசேட கூட்டு துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. பெருமளவிலான முஸ்லிம்கள் துஆப் பிரார்த்தனையில் பங்குபற்றினர்.
புத்தளம்
புத்தளத்தில் ஜும்ஆத் தொழுகை முடிவடைந்த பின்னர் ஒன்றுகூடிய ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் இந்த அமைதிப் பேரணியில் பங்கு கொண்டனர்.
அநுராதபுரம்
அனுராதபுர மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல் களில் நேற்று விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.
-Thinakaran
Leave a comment