பொதுமக்கள் கவலை!
கடந்த வெள்ளிக்கிழமையன்று சிங்கள பேரினவாதிகளால் உடைக்கப்பட்டு இன்று அதன் இருப்புக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கும் ஓர் ஆபத்தான நிலையைக் கருத்திற்கொண்டு நேற்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் கேட்டுக்கொள்ளப்பட்ட அறிக்கைக்கு இணங்க, இன்று அம்பாறை மாவட்டத்திலும் காத்தான்குடியிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனமும் பொது நிறுவனங்களும் கூட்டாக எடுத்த தீர்மானத்தின்படி அம்மாவட்டங்களில் தற்பொழுது ஹரத்தால் இடம்பெற்று வருகின்றது.
இதே நிலையில் காத்தான்குடியிலும் பிரதானவீதிக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. பாடசாலைகளும் அரசாங்க அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கின்றன. இந்த ஹர்த்தால் ஏற்பாடுகளில் காத்தான்குடியின் பிரதான அமைப்புக்கள், அரசியல் தலைவர்கள், கட்சிகள் பெரிதாக ஈடுபடவில்லை என்ற நிலைப்பாடு பொதுமக்களிடம் பலத்த சந்தேகங்களையும் ஆத்திரங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கவலைதெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment