பள்ளிவாயல் உடைப்புக்கு எதிரான பிரேரணை காத்தான்குடி நகர சபையில் நிராகரிப்பு

தம்புள்ளை பள்ளிவாயல் உடைப்புக்கு எதிராக காத்தான்குடி நகர சபையில் கொண்டுவரப்பட்ட கண்டன பிரேரணை சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நகர சபை எதிர்க்கட்சி தலைவர் பொறியிலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபையின் மாதார்ந்த அமர்வு இன்று வியாழக்கிழமை தவிசாளர் எஸ்.எச்.அஷ்பர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பு சம்பவத்தை காத்தான்குடி நகர சபை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனும் பிரேரணையை எதிர்க்கட்சி தலைவர் றஹ்மான் சபையில் சமர்ப்பித்தார். குறித்த பிரேரணை சபையின் தவிசாளர் உட்பட ஆளும் தரப்பு உறுப்பினர்களினால் நிராகரிக்கப்பட்டது.

இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஷ்பரிடம் கேட்டதற்கு,

“இப்பிரேரணை ஏழு நாட்களுக்கு முதல் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் குறித்த பிரேரணை இன்று தான் சபைக்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன், பள்ளிவாசல் உடைப்பு காத்தான்குடி நகர சபையின் ஆளுமைக்குட்பட்ட விடயமாக இல்லாமையினாலும் பிரேரணை நிராகரிக்கப்பட்டது” என்றார்.

-tamilmirror

Published by

Leave a comment