இலங்கையில் குடு எனப்படும் போதைப் பொருள் விநியோகிக்கும் பிரதான மத்திய நிலையமொன்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பகுதியில் முற்றுகையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு அருகில் உள்ள 2000 பிளாஸா என்ற அதி சொகுசு அடுக்குமாடி வீட்டுத் திட்டத்தில் 10வது மாடியில் உள்ள வீடொன்றை சோதனை செய்தபோது அங்கு குடு விநியோக நடவடிக்கையில் இடம்பெறுவது கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாட்டிற்குச் சென்று மறைந்து வாழும் ´சுதா´ எனப்படும் நபரினால் குறித்த குடு விநியோக நிலையம் நடத்திச் செல்லப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
வீட்டை முற்றுகையிட்ட போது அங்கு குடு பொதி செய்து கொண்டிருந்த 30,32,34 வயதுடைய மூன்று பெண்களும் 26, 32 வயதுடைய இரு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குடு விநியோகிக்க பயன்படுத்தப்பட்ட விசேட லொறியும் 500 கிராம் குடுவும் 7680000 ரூபா பணத்துடனும் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-adaderana
Leave a comment