-MJ
நான்கு முறை UEFA உலக கழக சம்பியன் பட்டம் வென்ற உலகின் முன்னணி வீரர்களைக் கொண்டமைந்த ‘பாசிலோனா’ நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ‘செல்சி’யுடன் விளையாடி மொத்தகோல் (Aggregate)அடிப்படை விதிக்கமைய அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. இதனால் இவ்வருடத்துக்கான UEFA இறுதிப்போட்டியில் விளையாடும் தகுதியை இழந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் முன்னணிக் கழகமான பார்சிலோனா, உலக கால்பந்தாட்ட சிறந்த வீரரான மெஸ்ஸி மற்றும் நடப்பு உலகக் கிண்ண சம்பியன் ஸ்பெயின் நாட்டின் அதிரடி வீர்களையும் கொண்டமைந்த சவால்மிக்க ஓர் கழகமாகவே திகழ்ந்தது. அரை இறுதி ஆரம்பப் போட்டியில் 1:0 எனும் கோல் அடிப்படையில் வெற்றிபெற்றிருந்த செல்சி கழகம், நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பார்சிலோனாவை 2:2 என சமன் செய்து, மொத்த கோல்கள் 3:2 என்ற அடிப்படையில் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இம்முறை நடைபெற்று வரும் இங்கிலாந்தின் பிரிமியர் லீக் போட்டிகளில் பிரகாசிக்காத செல்சி கழகத்திற்கு UEFA கிண்ண இறுதிப் போட்டி ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியல் மெட்ரிட் மற்றும் பேயர்ன் மியூனிச் ஆகிய அணிகளுக்கிடையில் இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி செல்சியுடன் எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி ஏலியன் எரினா, மியுனிச்சில் நடைபெறும். 1:2 கோல் அடிப்படையில் பேயர்ண் மியூனிச் முன்னணியில் திகழ்கின்றது.
UEFA கிண்ண சம்பியன் தொடரில் ரியல் மெட்ரிட் கழகம் 9 தடவைகள் வெற்றிபெற்று சரித்திரம் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![Barcelona-misery-v-Chelsea_2755396[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/barcelona-misery-v-chelsea_27553961.jpg?w=300&h=225)
Leave a comment