‘பெனால்டி’ உதைகளில் நம்பிக்கை நட்சத்திரங்களான ரொனால்டோ, ககா, ராமோஸ் ஆகியோர் கோல்கள் இடவில்லை!
-MJ
UEFA கிண்ண இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஐரோப்பிய கனவு கழகமாகக் கருதப்படும் ரியல் மெட்ரிட் (Real Madrid) பேயர்ன் மியுனிச் (Bayen Munich) அணியுடன் இன்றிரவு நடைபெற்ற போட்டியில் பெனால்டி உதைகள் மூலமான கோல் அடிப்படையில் தோல்வியைத் தழுவியதன் மூலம் அதிகமான உலக இரசிகர்களின் கனவுகளையும் கலைத்துச் சென்றுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் மெட்ரிட் நகரில் ரியல் மெட்ரிட் மைதானத்தில் இன்றிரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் 2:1 என முன்னணியில் திகழ்ந்த பேயன் மியூனிச் கழகத்தை எதிர்த்தாடிய மெட்ரிட் அணியினர் 2 கோல்களை இட்டு வெற்றிவாய்ப்பினைப் பெற்றபோதிலும் அதிரடி ஆட்டத்தால் பேயன் மியுனிச் கோல் ஒன்றை இட்டு 3:3 என 90 நிமிடங்கள் கொண்ட போட்டியைச் சமன் செய்திருந்தது.
இதன்காரணமாக மேலதிகமாக 30 நிமிடங்கள் (Extra Time) வழங்கப்பட்டன. மேலதிக 30 நிமிடங்களில் இரு அணிகளும் கோல்கள் இடாது போட்டியைச் சமன் செய்ததால் ‘பெனால்டி’ உதைகள் மூலம் 3வது சுற்றுக்கு போட்டி சென்றது. என்பதாயிரம் இரசிகர்களின் ஓசைகளுடன் ஆராவாரமாக ஆரம்பித்த பெனால்டி உதைகளில் ரியல் மெட்ரிட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரொனால்டோ, ககா ஆகியோர் அடித்த கோல்களை எதிரணி கோல்காப்பாளரால் அபாரமாக தடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரியல் மெட்ரிட் அணியின் முன்னணி வீரரான ராமோஸ் கோலை வெளியில் அடித்து எதிரிணக்கு வெற்றியை வழங்கினார்.
9 தடவைகள் ஐரோப்பா கிண்ணத்தை சுவீகரித்து உலக சாதனை படைத்திருக்கும் ரியல் மெட்ரிட் இன் ஐரோப்பாக் கிண்ணக் கனவு கலைந்துவிட்டது. ஸ்பெயினின் இரு துருவங்களாகக் கருதப்படும் பாசிலோனா மற்றும் ரியல் மெட்ரிட் ஆகிய அணிகள் அரை இறுதியுடன் இச்சுற்றிலிருந்து வெளியேறியுள்ளமை அதிகமான உதைபந்நதாட்ட இரசிகர்களை ஏமாற்றிச் சென்றுள்ளது என்பது திண்ணமே.
இதன்படி இங்கிலாந்தின் முன்னணிக் கழகங்களுள் ஒன்றான செல்சியை (Chelsea) எதிர்த்து ஜேர்மணியின் முன்னணிக் கழகமான பேயரன் மியூனிச் இறுதிப்போட்டியில் மியுனிச் நகரில் எதிர்வரும் மேமாதம் 19ஆம் திகதி விளையாட இருக்கின்றது.
![Real-v-Bayern-Bastian-Schweinsteiger-mobbed_2755881[2]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/real-v-bayern-bastian-schweinsteiger-mobbed_27558812.jpg?w=300&h=225)
Leave a comment