கிழக்கில் 327 பட்டதாரி, டிப்ளோமா ஆசிரியர்களுக்கு நியமனம்

கிழக்கு மாகாண பட்டதாரி மற்றும் டிப்ளோமா ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் நேற்று 24ம் திகதி செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது.
மேற்படி வைபவமானது கல்வி அமைச்சின் பதில் செயலாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தலைமையில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீரதிசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும் மாகாண அமைச்சர்களான எம்.ஸ்.உதுமாலெவ்வே, எம் எஸ். சுபைர் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

மொத்தமாக 327 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இதில் தமிழ் மொழி மூலமான ஆசிரியர்கள் 256 பேரும் சிங்களமொழி மூலமான ஆசிரியர்கள் 71 பேருக்கும் வழங்கப்பட்டது.

தமிழ் மொழி மூலமான ஆசிரியர்களில் கணிதப் பாடத்திற்கு 97 ஆசிரியர்களும் விஞ்ஞான பாடத்திற்கு 40 ஆசிரியர்களும் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு 119 ஆசியர்களும் நியமனம் பெற்றார்கள்.

குறித்த ஆசிரியர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களிலே அதிகளவான ஆசிரியர் பற்றாக் குறைகளை எதிர் கொள்கின்ற பாடசாலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பதில் செயலாளர் எம்.ரி.ஏ.நிஸாம் குறிப்பிட்டார்.

-adaderana

Published by

Leave a comment