–ஜூனைட் எம். பஹ்த்–
கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்ற தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டாத இழுபறி நிலையில் இருந்த பள்ளிவாசல் விவகாரம் நேற்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ்புல்ழாஹ் அவர்களின் துரித முயட்சினால் தம்புள்ள மகா நாயக்க தேரர் அவர்களோடு பல மணி நேர பேச்சுவார்த்தைகள் தம்புள்ள விகாரயில் இடம்பெற்றது.
இப் பேச்சுவார்த்தைகளின் பயனாக இன்னும் மூன்று மாதங்களுக்கு எவ்வித பிரச்சினகளுமின்ரி குறித்த பள்ளிவாசலில் சமய அனுஷ்டானங்களை மேற்கொழ்வதெற்கும் எவ்வித தடைகளுமின்றி பிரதேச மக்கள் வழமை போன்று தமது கடமைகளை நிரவேற்ற முடியுமெனவும் இனாமலுவ மகா நாயக்க தேரர் உறுதி மொழி வழங்கினார்.
இந்நிகழ்வின் போது பிரதியமைச்சருடன் மாத்தளை மாவட்ட எம். பி லக்ஸ்மன் பெரேரா மாத்தளை மாநகர சபை மேயர் ஹில்மி கரீம் ஆகியோரும் கலந்து கொண்டதாக பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் சஜி தம்புல்ல இல் இருந்து தெரிவித்தார். ஆகவே இறுதிக்கட்ட தீர்மானம் எட்டும் வரைக்கும் நாட்டில் உள்ள சகல முஸ்லிம் மக்களும் எவ்வித ஆர்ப்படங்களிலும் வன்முறைகளிலும் ஈடு பட வேண்டாம் எனவும் பிரதியமைச்சர் மக்களை கேட்டு கொண்டுள்ளார்.

Leave a comment