L.E.D- Light-Emitting Diodes (ஒளி உமிழும் இருமுனையங்கள்)
இருபது வருடங்கள் அல்லது 30,000 மணித்தி யாலங்கள் பயன்படுத்தக் கூடிய மின்சாரத்தை சிக்கனமாக மீதப்படுத்தும் எல். ஈ. டீ. (L.E.D) மின்குமிழ் ஒன்றை உலகிற்கு அறிமுகம் செய்வதற்கு அமெரிக்க கம்பனி ஒன்று தயாராகி வருகிறது.
அமெரிக்காவின் வலு திணைக்களத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட போட்டியிலும் 10 வோட் அளவினைக் கொண்ட எல்.ஈ.டீ. மின்குமிழுக்கே முதலிடம் கிடைத்துள்ளது.
மூன்று வருட உத்தரவாதத்தினைக் கொண்ட இந்த மின் குமிழை சந்தைப்படுத்த தயாராகிவரும் அதன் உற்பத்தி நிறுவனம் ஒரு மின்குமிழின் விலை 60 அமெரிக்க டொலராக நிர்ணயித்துள்ளது. (7,800 ரூபா) சீஎல்எவ் மின்குமிழை விடவும் ஒருபடி முன்னேற்றமான முறையில் மேற்படி மின்குமிழ் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது.
இந்த மின்குமிழ் சந்தைக்கு வந்த உடனேயே இதனை மக்கள் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்வதற்கு அதிகம் முன்வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாத போதிலும் காலப் போக்கில் மக்கள் இதனை கொள்வனவு செய்ய முன்வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அமெரிக்காவின் ‘டைம்ஸ்’ சஞ்சிகை தெரிவிக்கின்றது.
-thinakaran (news)
Leave a comment