தம்புள்ளை – ரங்கிரி பள்ளிவாசலை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டத்திற்கு மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பிரச்சினை தொடர்பில் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தலைமையில் நேற்று (22) கம்பளையில் இடம்பெற்ற கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ தான் ஆதரவு தெரிவிக்கவில்லை என அலவி மௌலானா கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலகம் நேற்று விடுத்திருந்த அறிக்கையில், கம்பளை கூட்டத்தில் அலவி மௌலானாவும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியானது உலக முஸ்லிம் நாடுகளை ஏமாற்றும் சூழ்ச்சிகர நடவடிக்கை என மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா இன்று (23) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-adaderana
Leave a comment