தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தை கலந்துரையாடல் மூலம் தீர்க்கலாம்

இன மற்றும் மத ரீதியான பிரச்சினைகள் எழும்போது கலந்துரையாடல்களின் மூலம் ஒரு தீர்வுக்கு வருவதே அதனைத் தீர்ப்பதற்குரிய பொருத்தமான வழிமுறையென பிரதமர் தி. மு. ஜயரத்ன அவர்கள் வலியுறுத்தினார்.

சிறு சிறு கருத்து வேறுபாடுகளை பூதாகர மாக மாற்றுவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும் அவ்வாறான பிரச்சினைகளின்போது சகல தரப்பி னர்களினதும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்வொன்றிற்குச் செல்லவேண்டும் எனவும் பிரதமர் அவர்கள் சுட்டிக் காட்டினார்.

நேற்று (22) கலகெதர, ஹதறலியத்த பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பி ட்டார். ஹதறலியத்த, பெலேன போதிமாலகாறாம விஹாரைக்கு பத்து மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட தர்மபோதனை நிகழ்த்தும் கட்டிடத்தைத் திறந்துவைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டே மேற்கண்ட வாறு கூறினார்.வரலாற்றுப் புகழ்மிக்க ரங்கிரி தம்புலு புனித பூமி பிரதேசத்தில் தற்போது ஏற் பட்டிருக்கும் சமய புனிதஸ்தலம் சம்பந்த மான பிரச்சினையையும் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறிய பிரதமர் அவர்கள், அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

உலகிலுள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கையுடன் நட்புணர்வுடன் செயலாற்றும் இத்தருணத்தில் இவ்வாறான அற்ப விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இனங்கள் மற்றும் மதங்களுக் கிடையில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் செயலை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

-thinakaran

Published by

Leave a comment