தனியார் வங்கி முன்னோடிகளில் ஒன்றான கொமர்ஷல் வங்கி அல் அதாலாஹ் எனும் ஷரிஆ இஸ்லாமிய வங்கிச் சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு முன்வைத்துள்ளது.
‘வதியாத்தமான்’ நடைமுறைக் கணக்குகள், முதாரபாஹ் சேமிப்புக் கணக்குகள் மற்றும் தவணை முதலீடுகள் முராபஹா, முஷாரகா, டிமினிசிங் முஷாரகா, இஜாரா லீசிங் மற்றும் இறக்குமதிக்கான நிதிச் சேவைகள் என்பனவே வங்கி இஸ்லாமிய வங்கிச் சேவை மூலம் வழங்கும் சேவைகளாகும்.
இஸ்லாமிய நிதித்துறையில் நன்கு அனுபவமுள்ளவர்களைக் கொண்ட முதற்தரமான ஷரிஆ மேற்பார்வையாளர் சபையின் வழிநடத்தல் மற்றும் கண்காணிப்பின் கீழும் இஸ்லாமிய நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்ற வங்கி அலுவலர்களாலும் இஸ்லாமிய வங்கி முறை முறையாகப் பின்பற்றப்படுகிறது.
இதன் மூலம் இலங்கையர் அனைவருக்கும் உலகத் தரத்திலான நிதிச் சேவைகளை வழங்கும் பாரம்பரியத்தைத் தொடர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-தினகரன்
Leave a comment