அதிகாரத்தை கையிலெடுக்குமா நகரசபை?
எமது பிரதேச அரசியல்வாதிகள், தொண்டார்வ நிறுவனங்கள், மற்றும் சமூக சேவை இயக்கங்கள் ஆகியவற்றால் எவ்வளவுதான் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க தீவிர நடவடிக்கை எடுத்தாலும் சில செல்வாக்குள்ளவர்களால் மக்கள் வசிக்கும் அல்லது பொழுபோக்கும் இடங்களில் குப்பைகளைக் கொட்டி அவற்றினால் சூழவுள்ள மக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் காத்தான்குடி வைத்தியசாலை, அல்மனார் கல்லூரி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மக்களுக்கு நோய்பரப்பும் கிருமிகளும் நுளம்புகளும் காணப்பட்டதால் பல சிக்கல்களை அப்பகுதி மக்கள் எதிர்நோக்கி இருந்தனர்.
காத்தான்குடி மக்களின் பொழுதுபோக்கும் ஒரே இடமான கடற்கரைப் பகுதிகளிலும் இவ்வாறான மக்களுக்கு நோயை ஏற்படுத்தும் குப்பைகளைக் குவித்து அதிலும் சிலர் சுயலாபம் கண்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்து. கேட்டால் தனது சொந்தக்காணி, எங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது என்றெல்லாம் அதிகாரத்தனமான பதில்கள் வருகின்றன. தனது சொந்தக்காணியின் குழிகளை நிறப்ப வேண்டுமானால் அதற்கு பணம் கொடுத்து கல், மண் இவைகளைக் கொண்டு நிரப்பலாம்தானே? சில சந்தர்ப்பங்களில் வீடு உடைக்கப்பட் தூசிக்கற்கள் இலவசமாகவும் பெறமுடியும். எனவே இப்படிப்பட்டவர்கள் ஓசியில் வேலைபார்த்து மக்களின் சுகாதார விடயங்களில் விளையாட நினைக்கின்றனர்.
வெள்ளிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெளியூர் குடும்பங்களும் வருகின்றனர். உணவு பறிமாற்றங்களும் விருந்தோம்பல்களும் கடற்கரையில் நடைபெறுகின்றன. அருகில் இருக்கும் குப்பை மேடுகளில் மிருக எழும்புகளின் கழிவுகளின் துர்வாடை இப்பகுதியில் வீசுகின்றது. தெருநாய்களின் தொல்லைகளும் கட்டாக்காளி மாடுகளின் தொந்தரவுகளும் கடற்கரைகளில் கட்டப்படுத்த முடியாதவையாக இருந்து வருகின்றன. கடற்கரையை அண்மித்த வீதியோரத்தில் அழகிய தென்னை மரங்களும் செடிகளும் அழகுபடுத்தி வரவேற்றாலும் குப்பைகளும் துர்நாறற்ங்களும் சகிக்கமுடியாமல் இருக்கின்றன.
கடற்கரையில் காலையில் உடற்பயிற்சி செய்துவரும் இளைஞர்கள் பல முறை கடற்கரையை சிரமதானம் செய்து வந்தனர். எனினும் மக்களின் கவனயீனமும் அதிகாரத் துஷ்பிரயோகங்களும் மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு இடைஞ்சலாக இருந்தததினால் அவர்களுக்கே வெறுத்துவிட்டது. கடற்கரையில் சேரும் திண்பண்ட கழிவுகளுக்கு குப்பைத் தொட்டிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் அதனைப் பொருட்படுத்துவதே இல்லை. குப்பைத் தொட்டி நிறைந்தாலும் அதனை நகரசபை பல நாட்களாகக் கண்டு கொள்வதும் இல்லை! இதனால் தெருநாய்களும் கட்டாக்காளி மாடுகளும் தலையை விட்டு குப்பைகளை வெளியில் எடுத்து சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துவருகின்றன.
எமது ஊருக்கு இருக்கும் ஒரே ஒரு பொழுதுபோக்கும் இடமான கடற்கரையின் சுகாதார விடயங்களில் முதலில் மக்களுக்கு அக்கரை வர வேண்டும். அதிகாரமுள்ள நகரசபை இவ்விடயங்களில் தனது அதிகாரத்தைக் கையிலெடுத்து செயற்படுத்த வேண்டும் என கேட்கின்றோம்.
‘சுத்தம் ஈமானின் பாதி’


Leave a comment