வாழைச்சேனை வினாயகபுரம் கிராமத்தில் இடி மின்னல் தாக்கிய சம்பவத்தில் வீடொன்று எரிந்து சேதமாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. வீட்டில் கணவன் மனைவி உட்பட ஐந்து பேர் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்த வீட்டை மின்னல் தாக்கியுள்ளது. இதில் குறித்த ஐவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ள போதிலும் வீட்டில் இருந்த மின் பாவனைப் பொருட்கள் உட்பட உடு துணிகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பிரதேசங்களிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதன் போது இடம்பெற்ற இடி மின்னல் தாக்கத்தினால் பல வீடுகளில் மின் உபகரணங்கள் சேதத்துக்குள்ளாகியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாலா பிரதேசங்களிலும் இடம்பெற்ற மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் பல வீடுகளில் இருந்த மின் பாவனைப் பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இடி மின்னல் தாக்கத்தை தொடர்ந்து ஆங்காங்கே மின்சாரமும் தடைப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-Thinakaran
Leave a comment