இலங்கை – இஸ்ரேல் இடையிலான முதலாவது கலந்துரையாடல்

இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சுக்கும் டையிலான முதலாவது இருதரப்பு கலந்துரையாடல் இலங்கை வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்றதாக அவ்வமைச்சு தெரிவித்தது.

இலங்கையின் தூதுக்குழுவுக்கு வெளிவிவகார செயலாளர் கருணாரட்ண அமுனுகமவும் இஸ்ரேலிய தூதுக்குழுவுக்கு  இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசிய – பசுபிக் திணைக்களத்தின் தலைவரான ருத் கஹானொவும் தலைமை தாங்கினர்.

இரு தரப்பு உறவுகள் மற்றும் விவசாயம், சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு முதலான விடயங்களில் ஒத்துழைப்புகளை அதிகரித்தல் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றன.

இந்த வருடாந்த கலந்துரையாடல்கள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பல்துறை சார்ந்த உறவுகள், பரஸ்பர நன்மைகளுக்கான பொருளாதார ஒத்துழைப்பு வலிமையடையும் எனவும் எதிர்பார்;க்கப்படுவதாக இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இலங்கையர்களுக்கு மேலும் கூடுதலான தொழில்வாய்ப்புகளை வழங்கவும் இஸ்ரேலிய தரப்பு இணங்கியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

-tamilmirror

Published by

Leave a comment