80 வருட வரலாற்று பள்ளிவாயல்! தகர்க்க பௌத்த பிக்குகள் முயற்சி!!

-MJ

பௌத்த பிக்குகள் தலைமையில் தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய பள்ளிவாயல் நிர்மாணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நண்பகள் இந்த ஆரப்பாட்டம்  ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹைரிய்யா எனப்படும் இப்பள்ளிவாயல் 80 வருடங்கள் வரலாற்றைக் கொண்டிருந்தும் ரங்கிரி விகாராதிபதிகளால் பள்ளிவாயல் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.

பொலிசாரின் பாதுகாப்புக்கைள் தாண்டியும் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றதாகவும் அறியப்படுகிறது. இதுவரைக்கும் இங்கு ஐந்து வேளை தொழுகைகளும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையும் எவ்வித பிரச்சினைகளுமின்றி நடந்து வந்த நிலையிலேயே இத்தூண்டுதல் சில விசமிகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. தற்பொழுது விசேட அதிரடிப்படையினர் பள்ளிவாயலை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

Published by

Leave a comment