இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கட் தொடர்

-MJ

இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடர்களை மீண்டும் நடாத்தும் படி பாகிஸ்தான்  கிரிக்கெட் சபையின் தலைவர் ஷாகா அஷ்ரப் இந்தக் கோரிக்கையை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் என். ஸ்ரீனிவாசனிடம் விடுத்துள்ளார். சென்றவாரம் டுபாயில் நடைபெற்ற கிரிக்கட் சம்மேள கூட்டத்தில் இக்கோரிக்கையை ஷாகா அஷ்ரப் விடுத்திருந்தார்.

 2009ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் வைத்து தாக்குதலுக்குள்ளானதிலிருந்து சர்வதேசப் போட்டிகள் பாகிஸ்தானில் நடாத்துவதற்கு சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் தடை விதித்திருந்தது. இதனால் பாகிஸ்தானின் தொடர்களை பெரும்பாலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே அண்மைக்காலமாக பாகிஸ்தான் கிரிக்கட் நடாத்தி வருகின்றது. எனவே இந்தியா பாகிஸ்தான் தொடர்களை இந்தியாவில் நடாத்துமாரும் அதற்கான செலவுகளை பாகிஸ்தான் கிரிக்கட் பொருப்பேற்கும் எனவும் ஷாகா தெரிவித்திருந்தார்.

Published by

Leave a comment