சாய்ந்தமருதுவில் தீயில் எரிந்து குடும்பப் பெண் பலி

சாய்ந்தமருது பிரதேச வீடொன்றில் மின் ஒழுக்கினால் ஏற்பட்ட தீயில் சிக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (19) வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
சம்பவத்தில் சாய்ந்தமருது ஒராபிபாஷா வீதியில் வசிக்கும் முஹம்மத் ஹனிபா ரிஸ்வானா (வயது36) என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக மரணித்துள்ளார்.

இவர் ஒரு பிள்ளையின் தாயாவார்.

இன்று மதியம் தனது வீட்டுக் குளியலறையில் மின் இயந்திரத்தில் ஆடைகளை கழுவிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மின் ஒழுக்கினால் அவர் தாக்கப்பட்டதுடன் இயந்திரம் சகிதம் பரிதாபகரமாக தீயில் எரிந்து அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

-Adaderana

Published by

Leave a comment