காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அண்மித்த பகுதிகளில் இலையான்கள் அதிகரிப்பு

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பைகள் கொட்டப்படுவதால் வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இலையான்கள் மற்றும் நுளம்புகள் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக காத்தான்குடி வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் வைத்தியசாலையில் சமயலறை ஊழியர்கள் அசௌகரியங்களை எதிர் நோக்குவதுடன் நோயாளிகளுக்கென சமைக்கப்படும் உணவுகள் சுகாதார சீர்கேடுடையதாக மாறுவதற்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இங்கு குப்பைகள் கொட்டப்பட்டதன் காரணமாக அல்மனார் அறிவியற் கல்லூரியும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதனைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை இவ்விடத்தில் குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.அஷ்பர் தெரிவித்தார்.

-Tamilmirror

Published by

Leave a comment