-MJ
T20 போட்டிகளின் வருகையால் Champions Trophy போட்டிகளைக் கைவிடுவதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. 1998 ல் ‘நொக்அவுட்’ தொடராக ஆரம்பித்த இப்போட்டிகள் 2002ம் வருடத்திற்குப் பின்னர் ICC Champions Trophy என விளையாடப்பட்டு வந்தது.
இரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வந்த இப்போட்டிகள் சில காரணங்களால் இடையில் தடைப்பட்டன. 50 ஓவர் போட்டிகளில் அதாவது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் உலகக் கிண்ணமும், T20 போட்டிகளில் இரு வருடத்துக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளும் போதுமானது என அறிவித்த ஐ.சி.சி, இதற்கு பதிலாக டெஸ்ட் போட்டிகளில் Champions போட்டிகளை நடாத்த தீர்மானித்து வருவதாகவும் அறிவித்துள்ளது. 2013ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் போட்டியுடன் இத்தொடர் கைவிடப்படும் எனவும் மேலும் அறிவித்துள்ளது.
இத் தொடரில் அதிக ஓட்டங்களை (700) கிறிஸ் கெய்லும், அதிக பட்ச விக்கட்டுக்களை (24) முத்தையா முரளீதரனும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment