மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 4 பிள்ளைகளின் தாயொருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக அவரது கணவரினால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனான் சித்தி வஜீஹா என்ற 49 வயது பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு காத்தான்குடியிலிருந்து இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான பஸ்வண்டியிலில் பயணம் செய்தபோது பஸ்ஸின் பின்புறத்தில் அமர்ந்து வந்த மனநோயாளியான தனது மனைவி தனக்குத் தெரியாமல் இடையில் இறங்கிவிட்டதாகவும் இதுவரை அவரை காணவில்லை எனவும் மேற்படி பெண்ணின் கணவரான நாகூர் அலியார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
-Tamilmirror
Leave a comment