மூன்று தசாப்த கால போரின் விளைவாகத் தம் சொந்த வாழ்விடத் தைத் துறந்து இடம்பெயர்ந்து சென்ற அகதிகள், நாட்டின் பல பாகங்களிலும் இப்போதும் அவதி வாழ்க்கை வாழ்ந்த வண்ணமே இருக்கின்றனர்.
இவர்களில் தமிழர் – முஸ்லிம்கள் – சிங்களவர் என மூவினத்தாரும் அடங்குவர். இவர்களின் விடிவுக்காக் இதயசுத்தியோடு பாபடும் அமைச்சர் றிசாத் பதியுதீன், தான் வடபுலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைச்சர் என்றவகையிலும், தானும் ஒரு அகதி என்ற வகையிலும் தன் சமூ கத்தார் குறித்தும் தனி கவனம் செலு த்தி காரியமாற்ற வேண்டியது, தவிர் க்கவோ அன்றி தட்டிக்கழிக்கவோ முடியாத அரசியல் நிலைப்பாடு ஆகும் என்பதை அரசியல் விற்பன் னர்கள் ஒப்புக்கொள்வர்.
வடபகுதி முஸ்லிம்கள் குறித்து சிந்திப்போமேயானால் அவர்கள் போரின் கொடூரத்தினால் இடம் பெயர்ந்த சராசரி அகதிகள் அல்லர். அவர்கள் இனரீதியில் ஓர் இன சுத்திகரிப்புக்கான சதியில் சிக்கி, ஓரிரு மணித்தியால அவகாசத்தில் வெறுங்கையோடு விரட்டப்பட்ட நிர்ப்பந்தத்தின் பேரில் வெளியேற்றப் பட்ட பாவாத்மாக்கள், ‘ஓரினத்தின் சிலர்’ என்ற வரைவிலக்கணத்தைத் தாண்டி ஒட்டுமொத்த முழு சமூகம் என்ற அடிப்படை யில் வடபகுதி முஸ்லிம்கள் பாரம்பரியப் பண்பியலோடு பரம்பரையாக வாழ்ந்து வந்த சொந்த மண்ணை துறந்து வந்த அகதிகளாவர். இப்படி 1990 இல் விரப்பட்டு, 21 ஆண்டுகள், நிறைந்துவிட்டன. வட பகுதி முஸ்லிம்களின் அகதி வாழ்வுக்கு வயது 21 ஆகும்.
இவ்வாறு பலவந்தமாக விரப்பட்டு அகதிகளாக வடபகுதி முஸ்லிம்கள், இன்றும் அதாவது 22 ஆவது வருடங்களாக புத்தளம் உட்பட, அநுராதபுரம், குருநாகல் ஏனைய பிரதேசங்களில் பல்வேறு சொல் லொணா துயரங்களுடன் அவதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்காக ஒரு விடியலை ஏற்படுத்த அவர்களை சொந்த இடத்தில் மீள குடியமர்த்த அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் சமீப காலமாக அகதிகளின் வாழ்வில் புதியதொரு பிரச்சினையை எதிர்நோக்கி அதை சமாளிக்க சலிக்காமல் உழைத்து வருகிறார். அது என்ன புதிய பிரச்சினை?
ஐ.நா.வின் மனித உரிமைகள் சபை (ஸினிசிவிஞி) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகளை பழைய அகதிகள், புதிய அகதிகள் எனப் பிரித்து செயலாற்றுகிறது. முப்பது வருடகால கொடூர யுத்தத்தின் இறுதிக்கட்ட 2009 ஜனவரியில் ஆரம்பித்து 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அகதிகளாக்கப்பட்டோர் புதிய அகதிகள் என்றும், அதற்கு முன்னைய காலப்பிரிவில் அகதிகளா னோர் பழைய அகதிகள் என்றும் வரைவிலக்கணம் கூறி மனித உரிமைகள் சபை பிரித்துப் பார்க்கத் தலைப்பட்டுள்ளது.
இவ்விரு நிலை அகதிகளில் புதிய அகதிகளுக்கு உதவும் நோக்கில், திட்டங்கள் தீட்டி மனித உரிமைகள் சபை செயல்பட்டு வருகிறது. புதிய அகதிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்தல், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் ஒரு தொகை பணம் கொடுத்தல் என்பன மனித உரிமைகள் சபை மேற்கொண்டு வரும் உதவித்திட்டங்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.
இந்த இடத்தில் இன்னொரு புதிய சிந்தனை தலை நீட்டுகிறது.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அகதிகளானோரை புதிய அகதிகள் எனப் பட்டியலிட்டு, அவர்களுக்கு மட்டும் உதவினால் அதற்கு முன்னர் அகதிகளான காலப்பிரிவால் மூப்படைந்த அகதிகளை, மனித உரிமைகள் சபையின் பரிபாஷையில் பழைய அகதிகளை கைகழுவி விடுவதே நலம் எனக் கொள் ளலாமா? அவர்களும் மனிதர்கள் அல்லவா? அவர்களுக்கு பசி தேவை குறைபாடுகள் என்று பல வாழ்வாதாரப் பிரச்சினைகள் இருக்கத்தானே செய்யும். இவற்றையெல்லாம் உய்த்துணர்ந்து செயல்படுவதுதானே மனுதர்மம்.
காற்று வீசுகிறது. அது ஆள் பார்த்து தரம் நோக்கி காலத்தை கணக்கிட்டு வீசுவதில்லை. அது எல்லோருக்கும் பொதுவாகவே வீசுகிறது. மனிதருக்கு சுவாசிக்க காற்று அவசியம் என்ற தேவைப் பாட்டை எல்லோரும் அனுபவிக்கும் வகையில் பொதுவாகவே அது வீசுகிறது. இது போன்றே இயற்கையின் ஏனைய எல்லா அம்சங்களும் பொதுவாகவே இயங்குகின்றன, தண்ணீர் சிலரின் தாகத்தை மட்டுமே தணிக்கும் வேறு சிலரின் தாகத்தை தணிக்காது என்ற ‘ஓரவஞ்சனை’ தண்ணீருக்கில்லை.
இயற்கை இப்படி பொதுவில் இயங்கும் போது, பகுத்தறியும் அறிவு கொண்ட விஞ்ஞான தொழில்நுட்பத்துறைகளில் உச்சியைத் தொட்டுவிட்ட இன்றைய நவீன கால நாகரிக மனிதன் பழைய அகதி புதிய அகதி எனப் பிரித்துப் பார்ப்பது எந்த வகையில் நியாயம்? இந்த ‘ஓரவஞ்சனை’ பாகுபாட்டால் பண்பாட்டு மனிதன் வெட்கத்தில் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது என கூறினாலும் அது நியாயமே.
இந்தத் ‘தலைக்குனிவை’ நீக்கி மனிதர்கள் தலைநிமிர்ந்து வாழும் நிலையை, தனக்குள்ள அதிகார வட்டத்துக்குள் இருந்து கொண்டு சில வேளை அதையும் மீறி மனிதாபிமான அடிப்படையில் செயலாற்றுவதில் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னிற்கிறார்.
ஒரு வகையில் பார்த்தால் ‘பழைய அகதிகள்’ எனப் பட்டியலிடப்பட்ட ‘சிரேஷ்ட (கால மூப்பினால்) அகதிகளை கவனிப்பார் – உதவுவார் எவருமில்லை என்றே கூறுதல் வேண்டும். அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில், புத்தளம் – அநுராதபுரம் – குருநாகல் போன்ற பிரதேசங்களில் அகதி முகாம்களில் இவர்கள் “ஏதோ பிறந்தோம், எப்படியோ வாழ்கிறோம்” என்ற மனநிலையில் காலத்தை கழிக்கின்றனர்.
இத்தகையோரை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவது அவர்களுக்கான வாழ்வாதார தேவைகளை செய்வது போன்ற பணிகளுக்காக பாராளுமன்றத்திற் குள்ளும் வெளியிலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் போராடி வருகிறார்.
அதிகாரபூர்வமாக மட்டுமின்றி தனது சொந்த முயற்சியிலும், சிரமத்திலும், பணத்திலும் இந்தப் பழைய அகதிகளின் விடிவுக்காக தனக்குக் கிடைத்த வாய்ப்புக்களையும், வசதிகளையும் செல்வாக்கையும் பயன்படுத்தி வருகின்றார் அமைச்சர் றிசாத் பதியுதீனின் நன்னோக்கும், நற்பணிகளும் நிச்சயம் சாத்தியமாகி, சாதனையாக மலர்ந்து, நாளைய சரித்திரத்தில் மணம் வீசும் என்பது மறுக்க முடியாத உண்மை.
அமைச்சர் றிசாத் பதியுதீனின் நாளைய சாதனைக்காக இன்றைய பணிகளுக்கு பதச்சோறாக ஒன்றை அசைபோடுவோம். இந்திய அரசு அகதிகளுக்காகக் கட்டிக் கொடுக்க முன்வந்திருக்கும் 50,000 வீட்டுத் திட்டத்தில் பழைய அகதிகளுக்கென 10,000 வீடுகளை ஒதுக்கித்தர வேண் டுமென கோரிக்கை விடுத்திருப்பதே நல்லுதாரணம்.
-Thinakaran
Leave a comment