கொழும்பில் சி.சி.ரி.வி கமராவுடன் நடமாடும் வான்

[CCTV- Closed Circuit Television (மூடிய சுற்று தொலைக்காட்சி)]

சி.சி.ரி.வி. கமரா பொருத்தப் பட்ட நடமாடும சேவை பொலிஸ் மாஅதிபர் என். கே. இளங்ககோனினால் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. சி.சி.ரி.வி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொழும்பு நகரத்தை பாதுகாத்தல் மற்றும் குற்றச் செயல்களற்ற நகராக கொழும்பை மாற்றும் நோக்குடனே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய 110 சி.சி.ரி.வி. கமராக்கள் கொழும்பின் முக்கிய நகரங்களில் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-Thinakaran

Published by

Leave a comment