உலகில் உயரமான கட்டடம் சவூதியில்

உலகிலேயே மிக உயரமான கட்டடம் சவூதி ஆரேபியாவின் ஜித்தா நகரில் கட்டப்பட உள்ளது. உலகின் தற்போதைய மிக உயர கட்டடமான புரஜ் கலிபா, டுபாயில் உள்ளது.

இந்த கட்டடத்தின் உயரம், 830 மீற்றர், இதற்கு போட்டியாக சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் ஆயிரம் மிற்றர் உயரத்தில் கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான, அனுமதியை கடந்த பெப்ரவரி மாதம் ஜித்தா மாநகரசபை வழங்கியுள்ளது.

பல நிறுவனங்களின் முதலீட்டில் இந்த கட்டடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள், 63 மாதங்களில் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

-Thinakaran

Published by

Leave a comment