தொழிநுட்பத்தில் ஒழுங்கு வேண்டும்: அலீம் தார்

‘லாகூர் கடாபி மைதானத்தில் நடுவர்களுக்கான அறை தனது பெயரில் அழைக்கப்படுவதன் காரணமாக அம்மைதானத்தில் நடுவர் பணியில் ஈடுவது தனக்குப் பிடித்தமானது எனத் தெரிவித்த அலீம் தார், அதைத் தவிர லோர்ட்ஸ் மைதானத்தில் வரலாறு மற்றும் பெருமை காரணமாக லோர்ட்ஸ் மைதானத்தில் நடுவர் பணியில் ஈடுபடுவதும் தனக்கு மிகப் பிடித்தமானது’

டுவர் மீள்பரிசீலனைத் திட்டம் நடுவர்களுக்கு மிசச்சிறப்பானது எனவும், அதைத் தான் முழுமையாக ஆதரிப்பதாக சர்வதேச நடுவரும், உலகின் முதற்தர நடுவராகத் தொடர்ச்சியாகத் தெரிவுசெய்யப்படுபவருமான அலீம் தார் தெரிவித்துள்ளார்.
தனது நடுவர் பணி தொடர்பான அனுபவங்களைப் பகிரும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு தவறான முடிவு ஒரு போட்டியின் முழுமையான முடிவையும் மாற்றிவிடக் கூடியது எனத் தெரிவித்த அலீம் தார், அதன் காரணமாக தான் நடுவர் மீள்பரிசீலனைத் திட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

எனினும் நடுவர் மீள்பரிசீலனைத் திட்டத்திற்கான தொழிநுட்பங்கள் சரியானமுறையில் ஓர் தொடர்ச்சியான வகையில் வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். நடுவர் மீள்பரிசீலனைத் திட்டம் அதிக சரியான முடிவுகள் வழங்கப்படுதலை உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார்.

ஹொட் ஸ்பொட் தொழிநுட்பம் சில தொடர்களில் பயன்படுத்தப்படுகிறது எனவும், சில தொடர்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், அது தொடர்பான ஓர் ஒழுங்கான தன்மை காணப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

நடுவர் மீள்பரிசீலனைத் திட்டம் கள நடுவர்களுக்கு எதிரானது எனத் தான் கருதவில்லை எனத் தெரிவித்த அவர், உலகின் மிகச்சிறந்த நடுவர்களும் தவறுகளைப் புரிய முடியும் எனவும், அதன் காரணமாக அத்தவறுகளை இல்லாமற் செய்ய நடுவர் மீள்பரிசீலனைத் திட்டம் அவசியமானது எனவும் தெரிவித்தார்.

ஆஷஷ் தொடரில் நடுவர் பணியில் ஈடுபடுவது கடினமானது எனத் தெரிவித்த அவர், ஆஷஷ் தொடரிற்கு பின்னாலுள்ள வரலாறு, அத்தொடருக்கான எதிர்பார்ப்புகள் காரணமாக அதிக அழுத்தங்கள் காணப்படும் எனவும் தெரிவித்தார்.
எனினும் ஆஷஷ் தொடரை பாகிஸ்தான் அணி பங்குபற்றும் தொடர்களில் நடுவர் பணியில் ஈடுபடுவது இன்னமும் கடினமானது எனவும் அவர் தெரிவித்தார்.

லாகூர் கடாபி மைதானத்தில் நடுவர்களுக்கான அறை தனது பெயரில் அழைக்கப்படுவதன் காரணமாக அம்மைதானத்தில் நடுவர் பணியில் ஈடுவது தனக்குப் பிடித்தமானது எனத் தெரிவித்த அலீம் தார், அதைத் தவிர லோர்ட்ஸ் மைதானத்தில் வரலாறு மற்றும் பெருமை காரணமாக லோர்ட்ஸ் மைதானத்தில் நடுவர் பணியில் ஈடுபடுவதும் தனக்கு மிகப் பிடித்தமானது எனத் தெரிவித்தார்.

தற்போது 44 வயதாகும் அலீம் தார், இன்னமும் 5 அல்லது 6 வருடங்கள் நடுவர் பணியில் ஈடுபட எண்ணுவதாகவும், 50 வயதில் நடுவர் பணியிலிருந்து விடைபெற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

-Tamilmorror

Published by

Leave a comment