-அஷ்செய்ஹ் C.M.M. அமானி–
தலைவர் / செயலாளர்,
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,
காத்தான்குடி.
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ
திண்மக்கழிவகற்றல் – வேலைத்திட்டம் தொடர்பாக…
காத்தான்குடியிலுள்ள திண்மக்கழிவுகளை அகற்றும் வேலைத்திட்டம் தொடர்பாக, பொருத்தமான காணியை வாங்குவதற்குப் பொதுமக்களிடமிருந்து நிதி சேகரிக்கும் முயற்சியில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மும்முரமாக ஈடுபட்டதையும், அதற்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா அணுசரனையாகச் செயற்பட்டதையும் யாவரும் அறிவர். இப்பணியில் சம்மேளனம் காட்டிய அக்கறை வெகுவாகப் பாராட்டத்தக்கதாகும்.
இதன் முக்கியத்துவம் கருதி எமது சபையும் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தியது, எமது சபை உறுப்பினர்களான கண்ணியத்திற்குரிய உலமாக்கள் குத்பாப் பிரசங்கத்தில் இவ்விடயத்திற்கு நிதி வழங்குவதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தினர்.
சம்மேளனத்தினதும், ஜம்இய்யதுல் உலமாவினதும் வேண்டுகோளை மதித்து, பொது மக்கள் தமது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கினர். பள்ளிவாயல்களின் நிருவாகிகளும் நிதி சேகரிக்கும் பணியில் ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டனர்.
மேற்படி நிதி சேகரிப்பை அடுத்து, இதற்கான ஏற்பாடுகளைத் துரிதமாக மேற்கொள்வது அவசியம் என்று பலரும் விரும்புகின்றனர். குத்பாக்களில் இது பற்றிக் கூறிய உலமாக்களிடமும் பலர் வினவியதாக உலமாக்கள் ஜம்இய்யாவிடம் தெரிவித்தனர். எனவே, இவ்விடயத்தில் மிக அவசரமாக கூடிய கவனம் செலுத்தி, இவ்விடயம் தொடர்பில் ஜம்இய்யாவுக்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவரது தூய செயற்பாடுகளையும் அங்கீகரிப்பானாக.
جزاك اللـــــه خــــــــــــــيرا
தலைவர் செயலாளர்
மௌலவி S.M. அலியார் (பலாஹி) அஷ்ஷெய்க் M.H. ஜிப்ரி (மதனி) BA.
பிரதி:
அல்ஹாஜ் S.H.M. அஸ்பர் JP,
கௌரவ நகர முதல்வர்,
நகர சபை,
காத்தான்குடி.
![New%20message[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/new20message1.png?w=150&h=150)
Leave a comment