பாகிஸ்தான் மாணவர் விசாக்களில் 40 வீதம் போலியானது!

-MJ

‘இதேபோல் பங்களாதேஷ் 38 %, இலங்கை 27 %இந்தியா 29 %,  எகிப்து 28% என்ற நிலையில் போலி மாணவர் விசா தரப்பட்டியலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.’

ஐக்கிய இராச்சியத்துக்குள் படிப்பதற்காக மாணவர் விசா மூலமாக  பாகிஸ்தானில் இருந்து விண்ணப்பித்து வருபவர்களில் 40 வீதமானோர் போலி மாணவர்களாகவே ஐக்கிய இராச்சியத்துக்குள் வருவதாக ஐக்கிய இராச்சிய உள்துறை செயலர் ‘தெரேசா மே’ கடுமையாக சாடியுள்ளார்.

இவ்வாறு படிப்பதற்காக வரும் மாணவர்களுக்கு ஆங்கிலமே தெரிவதில்லை எனவும் வேலைவாய்ப்புக்களுக்கே இவ்வாறு வருவதாகவும் குற்றம் சாட்டி இருக்கின்றார். இதனால் பாகிஸ்தானில் இருந்து மாணவர் விசாவுக்கு விண்ணப்பிப்போர் நேரடிப் பரீட்சைக்கு முகம் கொடுக்க வேண்டும் எனவும் திருப்தியளிக்காத நிலையில் விண்ணப்பத்தை நிராகரிக்குமாறும் ‘தெரேசா மே’ மேலும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் பத்தாயிரம் மாணவர் விசாக்களை பாகிஸ்தானுக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பங்களாதேஷ் 38 %, இலங்கை 27 %இந்தியா 29 %,  எகிப்து 28% என்ற நிலையில் போலி மாணவர் விசா தரப்பட்டியலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2006ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் நேர்முகப்பரீட்சை மூலமாகவே உலகின் பல பாகங்களுக்கும் பிரித்தாணிய விசா வழங்கப்பட்டு வந்தன. எனினும் அக்காலப்பகுதியில் பிரித்தாணியப் பிரதமராக இருந்த ‘கோர்டன் பிரவ்ன்’ இன் ஆட்சியின் போதே விண்ணப்பங்களை ஆராய்ந்து விசா வழங்கும் நடை முறை மாற்றப்பட்டன. இதனால் ஆங்கில மொழித் திறணற்றவர்கள் பலர் மாணவர் விசா மூலமாக குடிவந்துள்ளதால் ‘கோர்டன் பிரவ்னு’ம் இன்று விமர்சிக்கப்பட்டு வருகின்றார். எதிர்காலத்தில் நேர்முகப்பரீட்சை பல நாடுகளிலும் மீண்டும் நடைமுறப்படுத்த இருப்பதாகவும் நடப்பு அரசு தெரிவித்துள்ளது.

Published by

Leave a comment