இலக்குத் தவறிய வடகொரியாவின் ஏவுகணை

-MJ

பல உலக நாடுகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பலத்த எதிர்பார்ப்புடன் இன்று ஏவப்பட்ட வடகொரியாவின் ஏவுகணை இலக்கு தவறி இருப்பதாக வடகொரிய விண்வெளி ஆய்வு மையம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை இலக்கு தவறியதை அடுத்து தென்கொரியாவில் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் இடம் பெற்றும் வருகின்றன.  வடகொரியாவின் நேரப்படி காலை 07:39க்கு இவ் ஏவுகணை ஏவப்பட்டதாக வட கொரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர்  தெரிவித்திருக்கிறார்.

எனினும் தவறுகளை ஆராய்ந்து மீண்டும் ஏவுகணைப் பரிசோதணை விரைவில் மேற்கொள்ள இருப்பதாகவும் வட கொரியாவின் விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.

Published by

Leave a comment