இந்து சமுத்திரத்தில் பாரிய நிலநடுக்கம்

இலங்கையின் கடலோரங்களில் வசிப்போருக்கும் எச்சரிக்கை:

காத்தன்குடியிலும் இவ் அதிர்வு உணரப்பட்டதாக பலர் தெரிவிப்பு:

-MJ

இந்து சமுத்திரத்தில் இன்று 8.7 பரிமாண அளவு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தோனேசிய கடலின் 33 கி.மீ. ஆழத்தில் இவ் அதிர்வு ஏற்பட்டிருக்கின்றது. பண்டா ஆசெய்ஹ் எனும் இந்தோனேசிய நகரத்திற்கு 445 கி.மீ. தொலைவில் இவ் அதிர்வு ஏற்பட்டிருப்பதாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. மலேசியா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளில் இவ் அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் கரையோரங்களில் வாழ்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்கப்படுகின்றனர்.

இவ் அதிர்வுகள் காத்தான்குடியிலும் இலங்கையின் ஏனைய பல பாகங்களிலும் உணரப்பட்டதாகவும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Published by

Leave a comment