எம்பிலிப்பிட்டி தனமள்வில பகுதியில் இருந்து கஞ்சா பொதி களை ஏற்றிக் கொண்டு மட்டக் களப்பு நோக்கி வந்த வாகனம் ஒன்றினை வாழைச்சேனை பொலி ஸார் நேற்று (09) இரவு கைப் பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றிய வாகன த்தில் இருந்து நாலு (04) கிலோ கிராம் கஞ்சாவினை மீட்டதுடன், பெளத்த பிக்குகள் அணியும் சீருடைகள் சிலவற்றையும் கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய சந்தேசக நபர்கள் இருவரையும் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்தனர்.
எம்பிலிப்பிட்டி தனமள்வில பிரதேசத்தில் இருந்து கஞ்சாப் பொதிகளை ஏற்றிய வாகனம் வாழைச்சேனை மாவடிச்சேனை பகுதி வீடொன்றில் நிற்பதாக வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எம். காமினி தென்னகோனுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் சுற்றுச் சூழல் பிரிவு பொறுப்பதிகாரி எம். எஸ். எம். காலிதீன் தலைமையில் சென்ற குழுவினரே வாகனத்தை கைப்பற்றியதுடன், சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை ஒரு வாரத்திற்கு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ. ஜயவீர தெரிவித்தார்.
இச் சந்தேக நபர்கள் கஞ்சாப் பொதிகளை கடத்தி வரும் வேளையில் பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகப்படாத வகையில் இவர்கள் பெளத்த பிக்குகளின் சீருடைகளை அணிந்து வந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
-thinakaran
Leave a comment