மேற்குலகின் அழுத்தமான எச்சரிக்கைகளையும் கடந்து தனது சொந்தத் தயாரிப்பான Unha-3 எனும் ஏவுகணையை இம்மாதம் 12-16 ஆம் திகதிகளுக்குள் விண்ணில் ஏவ இருப்பதாக வட கொரியா உத்தியோகபூர்வமாக நேற்று அறிவித்திருக்கின்றமையானது, மேற்குலக நாடுகளுக்கு ஒரு சவாலை ஏற்படுத்தி இருக்கின்றது.
‘இவ் ஏவுகணை பரிசோதனையானது ‘எமது நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியையும் எம் மக்களின் சாதனையையும் வெளிக்கொனரும் ஓர் செய்பாடாக இருக்கும் ‘ என்பதாக இவ் அமைப்பின் பொது முகாமையாளர் Jang Myong Jin தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பல தடவைகள் வட கொரியா ஏவுகணை பரிசோதனை செய்திருந்தாலும் அண்மைக்காலமாக மேற்குலகின் கட்டளைக்கு இணங்க தனது பரிசோதனைத்திட்டத்தை நிறுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment