மட்டக்களப்பு, பனிச்சங்கேணி பாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்த இளைஞர்கள் இருவர் பாலத்திலிருந்து வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பதுறிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் வீதியில் வசிக்கும் இவ்விரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் வாகரையூடாக திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்தபோதே பாலத்திலிருந்து வீழ்ந்துள்ளனர்.
பொதுமக்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்ட இவர்கள், படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-tamilmirror
Leave a comment