பலஸ்தீன ஜனாதிபதி 15ம் திகதி இலங்கை வருகிறார்

-adaderana

பலஸ்தீன ஜனாதிபதி முஹம்மர் அப்பாஸ் எதிர்வரும் 15ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் பலஸ்தீன ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

Published by

Leave a comment