சகோதரர் ஆதம்லெவ்வை அப்துல் ஹமீட் (60) அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் லண்டனில் காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் காத்தான்குடி முன்னாள் சேர்மன் காசிம் ஹாஜியாரின் மூத்த மருமகனும், ஜெமீலாவின் அன்புக் கனவரும், சிமாயா, உஸ்மான், சிப்னா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்கள். காங்கேயனோடையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்கள் கடந்த 24 வருடங்களாக லண்டனில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அன்னாரது ஜனாஸாத் தொழுகை 10-04-2012 செவ்வாய்க்கிழமை ழுஹர் தொழுகையின் பின்னர் 1:30 மணியளவில் ஈஸ்ட் லண்டன் (வைட்சப்பல்) பள்ளிவாயலில் நடைபெறும். (East London Mosque (Whitechapel mosque), 46 – 92 Whitechapel Road, London E1 1JX.)
ஜனாஸா நல்லடக்கம் Woodgrange Park Cemetery, Romford Road, London E7 8AF (at 14:00) இடத்தில் நடைபெறும்.
லண்டனிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் வசிக்கும் எமது சகோதரர்கள் ஜனாஸா தொழுகையிலும் நல்லடக்கத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து சுவனத்தை வழங்க பிரார்த்திப்போம்.
தொடர்புகளுக்கு:
Jameela Adbul Hameed – 020 8986 8397
Mustafa – 07405 692279
Hafeel – 07720 555273
Mubassir – 07766 825046
Jafir – 07985 177844
-தகவல்: M. ஜாபிர்

Leave a comment