“Dream Spark” மென்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்க கல்வி அமைச்சுடன் மைக்ரோசொப்ட் கைகோர்த்துள்ளது

‘Dream Spark மூலம் Developer, Designer, மற்றும் Gaming ஆகிய பல்வேறு மென்பொருள்கள் இலங்கை மாணவர்களுக்கு வழங்க மைக்ரோசொப்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. கல்வி அமைச்சின் கீழுள்ள அனைத்து பாடசாலைகளிலும் கல்வி கற்கும், தமது கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் Dream Spark செயற்றிட்டம் முக்கியமானதாகும்’.

கல்வி அமைச்சின் “1000 School of the future” இரண்டாம் நிலை பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நாடு தழுவிய பாடசாலைகளுக்கு புதிய மென்பொருள்கள் விநியோகம்.

Dream Spark செயற்றிட்டத்தின் மூலம் நாடு முழுவதிலுள்ள பாடசாலைகளுக்கு இலவசமாக மைக்ரோ சொப்ட் மென்பொருள்களை வழங்குவதற்காக கல்வி அமைச்சுடன் மைக்ரோ சொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் 2012 மார்ச் மாதம் 6ம் திகதி ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம். குணசேகர, மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் தென் கிழக்காசிய வலயத்தின் பொது முகாமையாளர் ஜேம் ஹாபர் மைக்ரோ சொப்ட் ஸ்ரீலங்காவின் வதிவிட முகாமையாளர் சியான் டி சில்வா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அத்துடன் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் மைக்ரோ சொப்ட் நிறுவன அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Dream Spark மூலம் Developer, Designer, மற்றும் Gaming ஆகிய பல்வேறு மென்பொருள்கள் இலங்கை மாணவர்களுக்கு வழங்க மைக்ரோசொப்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. கல்வி அமைச்சின் கீழுள்ள அனைத்து பாடசாலைகளிலும் கல்வி கற்கும், தமது கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் Dream Spark செயற்றிட்டம் முக்கியமானதாகும்.

செயற்றிட்டத்தின் ஆரம்பமாக கல்வி திணைக்களமும் மைக்ரோ சொப்ட் நிறுவனமும் Dream Spark மென்பொருளை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இரண்டாம் நிலை பாடசாலை மட்டத்தில் தகவல் ¦¡ழில்நுட்ப உற்பத்தியாளர்களை உருவாக்கும் நோக்கில் ஆரம்பித்துள்ள Dream Spark செயற்றிட்டம் கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது.“1000 School of the future” இரண்டாம் நிலை பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பாடசாலை அபிவிருத்தி செயற் திட்டத்துக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, Dream Spark ஒப்பந்தமானது எமது “1000 School of the future” இரண்டாம் நிலை பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலை பாடசாலை 1000 அபிவிருத்தி செய்யும் செயற் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கான இன்னொரு முயற்சியாகும். நாட்டுக்கு தேவையனவற்றை அறிந்து அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதும் நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு முயற்சி எடுப்பதும் காலத்திற்கேற்ப சிறந்த செயற்பாடாகும். மஹிந்த சிந்தனையின் கீழ் அறிவு சார்ந்ததும் தொழில்சார் ரீதியுமான எதிர்கால சந்ததியை உருவாக்குவதே நோக்கமாகும். இலங்கையை எதிர்காலத்தில் அறிவுசார் கேந்திர நிலையமாக்குவதே எமது கொள்கை, நாட்டின் கல்வித் துறையில் புரட்சிகர சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு மைக்ரோ சொப்ட் நிறுவனம் பல்வேறு திட்டங்களை எம்முடன் இணைந்து நடைமுறைப்படுத்தியுள்ளது. Dream Spark திட்டமும் அத்தகையதொன்றாகும்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், எமது நாட்டிலுள்ள சிறுவர்கள் தொழில் நுட்பம் தொடர்பாக ஆர்வம் கொண்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. அதனை இன்னும் விரிவாக அபிவிருத்தி செய்வதே எம் அனைவரது நோக்கமாகும். இத்தகைய அபிவிருத்தியை நோக்கி செல்ல வேண்டுமாயின் சர்வதேச கல்வி முறைமைகளுடன் இணைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். Dream Spark திட்டமும் எமது கல்வித் திட்டத்தில் முக்கிய மைக்கல்லாக அமையும் என்பதே எமது நம்பிக்கை” என தெரிவித்தார்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தென்கிழக்காசிய வலயத்தின் பொது முகாமையாளர் ஜேம் ஹாபர் கருத்து தெரிவிக்கையில் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னோடிகளாக வர விரும்பும் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைப்பதற்காகவும் அவர்களது கல்வி நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்காகவும் மென்பொருள்களை வழங்குவதே எமது இலக்காகும். Dream Spark மூலம் உலகின் பலம்வாய்ந்த மென்பொருள்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் சென்றடையும் இதன்மூலம் இலங்கை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்று தமது ஆற்றல்களை திறம்பட வெளிக்காட்ட சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது”

சர்வதேச அறிவு, தரம் ஆகியவற்றை இலங்கையில் விஸ்தரித்து கல்வித்துறையை மேம்படுத்துவதற்கான மைக்ரோ சொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண் டுள்ளது. இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக தகவல் தொழில் நுட்பத்தை பாவனை செய்வதற்காக சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக கல்வி அமைச்சுடன் இணைந்து பல்வேறு திட்டங்களுக்கு தமது பங்களிப்பை வழங்கியுள்ளது. இத்தகைய ஒரு திட்டமே Dream Spark என்றால் அது மிகையாகாது.

-Thinakaran

Published by

Leave a comment