ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனதி உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கிணங்க, சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நாளை திங்கட்கிழமை சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரிலேயே, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக குறித்த நாடுகளுக்க விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
இதற்காக முதலில் சவூதி அரேபியாவுக்கு நாளை செல்வதாகவும் அதன் பின்னர் ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு அந்நாட்டு தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் ஆகியவற்றின் நன்றிகளை தெரிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சவூதி அரேபியாவிற்கான விஜயத்தின் போது, அந்நாட்டு மன்னர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களை சந்தித்து ஜனாதிபதியின் நன்றிகளை தெரிவிக்க உள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
-tamilmirror
Leave a comment