சொத்து விபரங்களை 30ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதிக்கு முன்பு சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றிய தகவல்களை அறியத்தர வேண்டும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய ஏற்கனவே அறிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் சொத்து அறிவிப்புக்கள் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெற்று வருகின்ற போதும் சில அரசியல்வாதிகள் தகவல்களை வழங்க மறுப்பதாவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குற்றஞ் சாட்டடினார்.

-adaderana

Published by

Leave a comment