( அஷ்செய்ஹ்: CMM. அமானி )
காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா சம்மேளனத்துக்கும் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:
07.04.2012
தலைவர் /செயலாளர்,
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி.
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ
சிலைகளைக் கண்ணியப்படுத்துதல், மாலைகள் போடுதல் தொடர்பாக…
அண்மையில் ஆரையம்பதியில் சேதமாக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரின் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டபோது, அந்நிகழ்வில் கலந்து கொண்ட நமதூர்ப் பிரமுகர்கள் அந்தச் சிலைக்கு மாலை சூட்டியமை, குத்து விளக்கு ஏற்றியமை தொடர்பாகப் பலர் கடித மூலமும், தொலைபேசி மூலமும் எம்மைத் தொடர்பு கொண்டு இது தொடர்பாக இஸ்லாமிய ஷரீஆவின் விளக்கத்தை கோரியுள்ளனர்.
இது சம்பந்தமாக விளக்கங்கள் சகலருக்கும் அளிக்கப்படவேண்டியிருப்பதால், இது பற்றிய ஒரு கைநூலை விரைவில் வெளியிட உத்தேசித்துள்ளோம். சிலைகளைக் கண்ணியப்படுத்துதல், மாலைகள் போடுதல் மற்றும் குத்து விளக்கேற்றல் போன்றவை நமது ஷரீஆவின் பார்வையில் இஸ்லாத்திற்கு விரோதமானவையாக இருப்பதால் இவை போன்ற விடயங்களில் நாம் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும். எனவே, எதிர்காலங்களில் இவற்றைத் தவிர்த்துக் கொள்வது அவசியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவரது தூய செயற்பாடுகளையும் அங்கீகரிப்பானாக.
جزاك اللـــــه خــــــــــــــيرا
…………………… ……………………
தலைவர் செயலாளர்
மௌலவி S.M. அலியார் (பலாஹி) அஷ்ஷெய்க் M.H. ஜிப்ரி (மதனி) BA
பிரதிகள்:
01. அல்ஹாஜ் M.I.M. ஸூபைர் – தலைவர், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், கா.குடி
02. அல்ஹாஜ் ULMN முபீன் BA – கிழக்கு மாகாண சபை உறுப்பினர், கிழக்கு மாகாணம், திருகோணமலை
03. ஜனாப் KLM. பரீட் JP. – கிழக்கு மாகாண சபை உறுப்பினர்,கிழக்கு மாகாணம், திருகோணமலை
04. அல்ஹாஜ் AGM.ஹாறூன் – ஷூறா சபை உறுப்பினர், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், கா.குடி
Leave a comment