வணக்கஸ்தலங்களுக்கு சி.எப்.எல். மின்குமிழ்கள்

மின்சார சிக்கன திட்டம்:

(CFL: Compact Fluorescent Lamps – கச்சிதமான ஒளிரும் விளக்குகள்)

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் திட்டத்தின் கீழ் வணக்கஸ்தலங்களுக்கு சி.எப். எல். மின்குமிழ்களை வழங்குவதற்கு மின்சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக நேற்று 6ஆம் திகதி கங்காராம விகாரைக்கு சி.எப்.எல். மின்குமிழ்களை அமைச்சர் வழங்கினார். கடந்த காலங்களில் மின்வெட்டுக்கள் அமுல்படுத்தப்பட்ட யுகம் இருந்தது.

அந்த யுகம் மீண்டும் தலைதூக்க விடக்கூடாது என்ற நோக்கத்துடன், வணக்கஸ்தலங்களையும் மின்சாரச் சேமிப்புத் திட்டத்துக்கு பங்காளிகளாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படு வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் மின் உற்பத்தியில் 84 வீதம் எரிபொருளினாலேயே மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு அதிகூடிய செலவு ஏற்படுகிறது. இதேவேளை, 2012ஆம் ஆண்டு இறுதியில் சகலருக்கும் வழங்குத் திட்டமும் சமகாலத்தில் நடைமுறைப்படு த்தப்பட்டு வருகிறது.

எனவே, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் அமைச்சின் திட்டத்துக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

-thinakaran

Published by

Leave a comment